
வாவென வரைகோடிட்டான்
தெரியாத பாதைகளும்
தெளிவாக தெரிந்தது..
போவென திரைபோடவே
போலியன உயிரதுவும்
போகாமல் நோகிறது
போராடி போராடியே..
வேகாமல் வேகவைத்தல்
என்னநியாயமோ வேடிக்கை
ஏதும் இல்லாமலே..
எண்ணற்ற எண்ணங்கள்
ஏட்டினில் ஏறினாலும்
என்றுமே நீகாண இயலாது
உனக்காவே கிறுக்கப்பட்ட
உள் ஆழ்ந்த வாசகங்களை..
ஈகைதனை விதைத்த
இறைவன் இறக்கமின்றி
விதித்து விட்டான்,
ஓலையதைமட்டுமே இதய
ஓசைதனை கேட்கச்சொல்லி
பலரின் இதயங்களை
பண்போடு சுமக்கும் பரகசிய
அந்தரங்க அதீதபந்தமிந்த
நாற்குறிப்பின் ஏடுகளே
இனி உனக்கான அனைத்தையுமே
அதனிடமே கேட்கின்றேன்.
நலம் சொல்லவோ கேட்கவோ
ஏட்டால் என்றும் முடியதே
மொழிபெயர்க்க முடியா
எண்ணற்ற இவள்மௌன
மொழியை போல..
.