
வலிகளின் ஆதிக்கமதோ உயிரதில்
உளியரைந்தும் புறட்டி போடுகிறது
நாளும் பாழ்லதில் வருடிநின்ற
அனைத்துமின்று நெருஞ்சி முள்ளதில்
மூழ்கடித்தே மூச்சவிழ்கிறது
கணம் கணமாக..
கனம்காணா பொழுதுகள் தானும்
கல்மனதோடு பூத்துபுறப்பட நினைக்கிறது
உனது பொய்கள்தானும் இவளின்
மெய்யதையும்சேர்த்து தன்னோடு
தானேயாதலால் தனல்நினைவதிலும்
தவழ்ந்தே தவிக்கிறது மனது..
பொய்தனில் ஏமாற்றத்தின் உச்சம்வரை
உள்ளிட்டு சென்றாலும் இன்னும் இன்னும்
அவன்நினைவார்த்தைகளே நிலையென
வெற்றிக்கொடிதனை நாட்டுகின்றது
நாழிதோறும் நாலாபக்கங்களிலும் மீளாமலே
என்னில்நின்றும் மீட்சிகாணாமலேயே..
கொடிநிழலதில் இளைப்பாறி கொண்டு
எதையும் இழக்கமால் நீநிதர்சனந்தனை
நியாயமின்றி பேசுகின்றாய் நிஜமாய்
அனைத்தையும் இழந்தவளிடம்-தெரிந்தும்
தெளிவற்றவள் இவள் என்பதாலா??
.
0 கருத்துரைகள்:
Post a Comment