கவிச்சாரல்

அணு அணுவாக வலிக்கும் வலியதில் அன்பே வலியது..


கணங்கள் தோறும் கவிப்பயணம்
கனவிலும் தொடர்கிறது கண்கோர்த்து
அவன்நினைவுகள்...

ஒற்றை வார்த்தைதனில் பற்றுண்டு
ஒத்தையாகவே தவிக்குது இவள்
இதயம் அவன் வருகைக்காக

உதயம் தோறும் வழிபார்த்து
ஏங்குகிறாள்,தன்னவன் தன்னை
கடக்குமந்த அரை நிமிடத்
துளிகளுக்காய்த் தானந்த
தவப்பொழுதுகளின் தவமிருப்புக்கள்..

.


வரங்களற்ற வரவுகள் நாம்
வர்ணங்கள் துளைத்த
பூக்களதுவும்,
விருதத்தோடு நிறந்தேடி
சென்றிடினும்,
வெறுமையாக வெறிக்கிறதின்று
நிறங்களும் நிறங்களற்று.
தருவதற்கு அதனிடம்
ஏதுமின்றி..

தவறியுந்தவறாக எண்ணுவதேனோ
தவறும் உலகமிதிலொன்றும்
புதுமையில்லையே
தவறுகளும் தவறுதளுமின்றி
உலகமேயில்லை என்றாயிற்று
இன்று..

இதுவெறும் நாணல் விளைநேசம்
பூவதோ புல்தோறும் கோடிப்
பெறுமதியன்றோ,
இதை பூரித்துபூரித்து புதைகுழி
கண்டோர் கோடியுளர் ..

போலியுற்ற புலவியுணர்வுகளில்
புரலும் உள்ளுணர்வுகளதை எப்படி
உணர்வென்று பூரிப்படைவாய்
தினதினம்?

ஒருதுளிநீரற்ற பாலைவனந்தனில்
பயணிக்கும், எத்திசைதனிலும்
வெறுமையே வெறிச்சோடிக்கிடக்கும்,
தனிமையான உள்ளத்து அகதி,
நீ நான் யாராயினும் உள்ளந்தனில்
உண்மையில்லாதவன் எவனோ
அவனின் நிலைதான் இதுதான்...

.


கொடூரத்தின் கோடதனை பார்த்து
நெருடலின் கீறலதையும் சேர்த்து
மாயமென்றானதோ மனிதமனங்களின்
கோடி, மாவிழி கோலங்களதுவும்..

கலைகலை என்றேதினம் சொல்லியேனிந்த
உள்ளக் கலைதனை இழக்கச்செய்கிறாய்?
உற்சாகமாகவே உளைச்சலின் ஆக்கிரமிப்பு
அதுவும் உச்சரிக்கிறது எம்பெயர்தனை
அதில் தன்னலமற்று உழைக்கிறது உள்ளக்
களைப்பதுவும் தன்பங்கிற்கு!!

தொட்டுநழுகிறது இதமாகவே எம்மைத்
தடம்பார்த்தே,வடுக்களையும் தழுவிச்
செல்கிறதிந்த அலைக்காற்று.
அக்னிவட்டத்தை முழுமையாக விழுங்கிய
பின்பும் கூட.
விந்தையின் விளிம்பு இதுவன்றேல்,
மாயத்தின் மாயையும் அதுவொன்றோ!!

உள்ளதில் ஊன்றிக்கிழித்த வடுக்களதுவும்
மாயத்தின் வசமாகாதோ என்றும்
அழைப்பதில் அழைக்காதே எனச்சொல்லும்
தழும்புகள் தானும்தன் பெயர்
மறக்கதோ இன்றோடு !!!

.

அன்பு அன்பென்று தினதினம்
அரலி விதைவிதைத்தவர் பல்லாயிரம்..
ஆளுதலது அன்பையன்றி மாதத்தின்
மாறுதலும் மனிதமனமன்றி வேறில்லை..
நேரத்துக்கு கறைசேர்த்தலதை விடுத்துன்
நெஞ்சத்தில் பறைசாற்றிப்பார் அதுகூறும்
உள்ளத்து உண்மையதை!

.பொய்யான உலகமிதில் பொய்முக
மானிடர்கள்.
போழம்நாவதைக் கொண்டவனிவனோ,
போதகன்தான் பௌத்திரராம்...

போட்கன் தன்னில் பௌத்திரமெனில்,
போங்காலமதுவும் தூரமில்லை..

போலியுலகமிது மானிடாவுன்
போகும்வழியதோ என்னது
பௌத்திரன் நானேயெனும்
காலத்தின் அசரீரிதானிந்த
இயற்கை அனர்த்தங்களோ!!!!

.

உண்மையிதுவாம் உயிர் பெற்றவனின்..
உள்ளமதுவும் உள்ளங்கை இதயமதின்,
ஆட்சிதனில் உருவமற்ற உவகைகொள்ளும்
அகமதுவும் உருவாகவே அலுப்பின்றிநிதம்
ஆழ்ந்த சிந்தனையதில் வாழ்வதனை
ஆழாமல் போவதென்னவோ நாம்தான்!!!

.

ஆரவாரந்தனை ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி
ஆரம்பித்து அவஸ்தைதனில் ஆர்ப்பரிக்கிறது
அஸ்திதனில் முடிவுறும் உள்ளக்காதல்
இதுவும்.....

முற்றுப்பெறும் உலகமிதில் முடிவிலி
காதலெனின் எம்சுவாசமதை நாம்
துறந்ததும்,சுற்றமது முற்றுபெறாமல்
எம்பெயரை உச்சரிப்பது எத்துனை
நாளைக்கு?

உயிரிருந்தால் உறவுமுறை அன்றேல்
உயிரோடுடலும் அற்றுப் போயின்
புதுபுதுப் பெயர்தனை சூட்டும்
போலி உலகமிதை என்ன சொல்வது??

.

முற்றுப்புள்ளி நா இடும்
ஒற்றைவரி வாக்கியம் அதற்கு
தொடர்புள்ளி வைக்க நினைப்பதேன்..

அன்பதனை பரிகசித்து அகமழிக்கும்
பரிசதனை எனக்களித்தும் ஏனோ
சாந்தமது இன்னும் உன்
நெஞ்சமதில் குடிகொள்ளவில்லை..

ஒருவேளை மெய்யழிக்கும் ஆயுதமேதும்
உறுப்பெறுகிறதோ நா வாழும் உன்
பட்டறைதனில்!!!!

.

உள்ளமதை நீவிலங்கிட்ட பொழுததிலும்,
உன் இதயந்தன்னில் நான் சிறைவாசம்
செய்த பொழுதெதிலும் இல்லாதமூச்சுத்
திணறல் உணர்கிறேன் இன்றேனோ??

.

மாறும் மனங்களின் பாசமதுவும்
பஞ்சம்.
தேடும் சொந்தங்களில் நேசமதுவும்
தஞ்சம்.
ஏதேதோ நாம் தேடும் உலகிதினில்
ஏமாற்றம் தான் மீதம் நிதநிதம்!!!!

ஏக்கங்கள் எமையாள நினைத்ததுமே
எல்லையிலா,
தேக்கங்கள் தாமாகவே குடிகொள்ளும்
எம்நெஞ்சதில்,
வாக்களிக்கும் யாவையும் வார்த்தைகள்
தாம் சொந்தம்கொள்ள,

வதமதோயெம்மை தம்பந்தமெனவே
தத்தெடுத்துக் கொள்ளுதிதோ.
ஆக+உலகமைதானமிதில் பந்தாடப்படும்
பந்துகளே நாம்.
பந்தாடுபவர்கள் எம் எதிரிகளும்
அல்லர்..

பார்வையாளர்களுக்கோ பஞ்சம் ஏதிந்த
இலவசக் காட்சி லாவகமாக கிட்டும்
பொழுததில்...

.

முடிவிலி பந்தமிதற்கு எப்படி
வார்த்தையதில் வாசகம் சொல்ல.

சேர்க்கை அல்லவே நேசமிதுவும்
சொற்கொர்வையதில் அகராதிசெய்ய..

நேசமென நாம்நினைக்கும் யாவையுமே
வேசமென மாற்றுதலே இம்மனிதம்
லேசனச் சொல்லும் கொள்கை
மோசம் ஒர்துளியேனும் நம்மிடையே
வேண்டாம்!

.


மௌனத்தாலே ஏன் இந்த
மனவந்தனை-நாள்முழுதும்
தேடினும் கிடைக்கவில்லை
கண்ணீரில் நீகுளித்த கார்மேக
வார்த்தை துளிகளதையின்னும்
என்மனமதோ கைதாக்கவில்லை.

தயங்கி நிற்கும் வார்த்தையதில்
தகர்த்தப்படும் உண்மையதுவும்.
மௌனமிதுவும் பறைசாட்டும்
சேதிதான் என்ன..

வார்த்தைகளதுவும் ஊமையாக
விளைக்கும் சொல் விதைதான்
என்னவோ???

.
வர்ணங்கள் எல்லாம் வாசகமா..
காலங்கள் பள்ள யாசகமா..
கைகுலுக்க இங்கு கையேது..
விதிமுழுக்க எங்கு கரம்தேடு..

விரல்நடுவே வழி தேடியோட..
விதியென்ன சின்ன நூலகமா..
பல்லாங்குழி நடுவே எம்தலையாட,
எங்கிருந்தோ ஆட்டுபவன்
கரமெங்குதேட,

வழிதேடிநாமலைய வழியுண்டா
நமக்கு, போக்கற்ற மனிதா+நின்
போக்கிடம்,கடைசியில் போக்காடு
தான் மறக்காதே..

.

அன்பின் ஆதிக்கமதின் பாசமிதை
ஆணவம் என்றெண்ணும் பலபேருக்கு
மத்தியில் மத்திமமாகவே வீற்றிருக்கிறாய்
மாயரூபமின்றி வீராப்புடனே விதைநிலமென
அன்பதனை மட்டுமே விதைத்துக்கொண்டு...

.

காத்துநின்ற காதல் கணங்களது
கோர்த்ததின்று சிந்தும் விழிநீர்
மழைத்துளிகளென.

கானல்நீரதில் நாத்தீட்டிய கண்ணீர்
காகிதம்,கண்ணீர் துளிகளும் கானல்
நீரது கலப்படமென்றீட்டு.

அனலுன்னது உடலெனதை அதீதமாக
நேசித்ததாலோ,கனலாகக் கக்கீற்று
சுடுவார்த்தைகளையின்று நாவதுவும்.

உதட்டலவில் வெறுத்தாலும் உளமறியாது
உவகைகொள்ளும் கொடும்வார்த்தைகளை
பெற்றவளிவளே..

.

நன்நாள் என்றுரைத்து இந்நாளதில்
தன்னாலே தாற்குழைந்து
போனதேதோ,
சந்தோஷமது வெகுதொலைவினில்
நின்று

சந்தேகமதையென்னில் விதைத்ததென்று
கண்கட்டிச்சென்றததோ
சாதகமானதுன் சுயநலப்போர்வையிது
விலகும் வரையிலன்றோ

இன்றுந்தன் காதலியிவளென்று
அறிமுகந்தனை
நின்று நிதானமாகவே அரங்கேற்றும்
நீஅந்நாளில் நான்கண்டதெதை
பொய்யென்கிறாய்?

கண்ணெதிரில் அவள்கைதேடியுன்கரம்
தகித்ததையாயில்லாதில்
நற்பதில் புதுவிலக்கணமதலாலென்னை
விலங்கிட்டதையா

எதிர்நின்றென் விழிதனைப்பார்க்க தடுக்கி
விழுவதேனோவார்த்தைகள்
ஏனின்று உன்னது வினாவதற்கு
கிடைத்ததா இப்போது விடையுனக்கு..

.

யுத்தமிதோ நெஞ்சில்
யுகயுகமாய் நடக்குது.
அன்பெனும் அவஸ்த்தைதனில்
என்பற்று தவிக்குதிந்நாவும்,

பண்பற்ற வார்த்தைகளது
உயிர்ப்பெற்றெழ
உயிருள்ளவனிவனோ
உருக்குலைந்து போகிறான்.

மரணிக்கும் வார்த்தகளதுக்கு
மரணமதை விரும்பாதவன்
மனமதை நிதநிதம்
வந்தனையூடே மரணிக்கச்
செய்கிறான்..

.

தேடலில் துவங்கிய உலகிது தேவை
இன்றி எமையழைக்கும் குரலெது?
திசைமாறி நாம் செல்ல,விசையதைக்
காட்டும் விரலது- இடைநடுவே யாம்
தவிக்க விலகும் மாயாக்கரந்தானது.

நொந்தலதன் நோக்கம் தானென்ன
நொந்து கிடக்கும் நெஞ்சமதற்கும்,
ஆறுதல் தரவியலாது என்றாலுமேன்
அகமகிழ்ச்சி அடுத்தவர் அழுநிலை
கண்டுனக்கு?

அகமதி கொண்டோனே உண்மையில்
அழிவு வெகுதூரமில்லை உன்னிடமிருந்து,
ஆக்கமது உன்னதின் பிரதிபலந்தானிது..

.

கயவன் இவன் பழிக்கேடிது
காலன் அவன் வரிக்கோடதில்.
எண்ணற்ற துன்பம் எமக்கு ,
எல்லையில்லா இன்பத்தேடல்
எதற்கு?

பொய்யான வாழ்வதனை
எமக்களித்து
மெய்யாக சிரிப்பவனெவனோ
இதற்கு?
வாழ்வதனை வாழ்வாங்கு வாழச்
சொல்லி,
வங்ககடலதையும் கண்களுக்கு
பரிசளித்து,
தாங்க முடியா துயரமதையும்
தாங்குமளவு தான் தருவானாம்
எமக்கு!

.

குறைவான காதலுனதை சரி செய்ய
நிறைவாகவே தந்து சென்றிருக்கிறாய்
குறைவற்ற கண்ணீர் துளிகளை..

தருணங்களெதிலும் தாங்கித் தாங்கி எனை
தாக்கி அழிப்பததில் மாறாது சிதைப்பதிலும்
கொடியது,
ஆட்கொண்டவுன் நினைவுகள் மட்டுமே...

.

மெய்யல்லாதோரின் மெய்யே மெய்யில்லை
பொய்யானவர் நா மட்டும் மெய்யாகுமாஎன்ன?

கற்பு எனும் வடிவம் கொடுத்தால் என்ன
நட்பு கானும் சொந்தமற்ற சொந்தத்திற்கு.

நேசமாக பாச நத்தவனமதை எமக்களித்த
நட்பும் உண்டு,
வேசத்தோடு நட்பதை சுயபழியிடும் நிரோதமும்
உண்டு.

அன்னமாதலால் அதற்கு பாலும் தண்ணீரும் ,
மனிதராதலால் தான் எமக்கு பாலும் கள்ளும்.
நாணல் அல்ல நட்பு,நாணி தலை குனியும்
நாணலாகும் நட்பு..

.

வண்டினங்களின் சிறகு நுன் காற்றா
மொட்டவிழும் மலர்களுக்கு வலிக்கும்?
அன்பை நேசிக்கும் மலரது அறியும்
தன்னில் வாசம் செய்யும் வண்டின்
ரீங்காரம் தான் அன்பின் பாஷையென்று..

.

கை கட்டி நின்று
கண்கட்டி போன காதலை
சுவாசித்தவளிவளோ பேதை
தான்!

போதையது தலைகொள்ள
பேதையிவள் விழியதை
ஒதுக்கி விட்டு,

எள்ளி நகையாடும் வார்த்தை
வாளதால் ஊமை பட்டம்
இவளுக்களித்து,

மட்டமாக பட்டமளிப்பு விழாதனையும்
கோலாகலமாகவே நடத்திச்
சென்று விட்டாய்..

என் குரலற்ற தேசம்தான்
உன்நேசம் என்றால்
பெயர் சூடா எனக்கு
பெயர் சூட்டும் மன்னனாக
இருந்து விட்டு போ.

.

உறவின் சுயநலங்களோ
சுயதேவைகளின் பங்களிப்பு
சுவாசத்தில் உள்ளவரை
முற்றுப் பெறுவதில்லை..

முற்றுப்பெறும் சமயம்
தொடர் புள்ளிவைக்க
அனுமதிப்பதில்லை
இவ்வுலகம்...

மரணத்தின்பின் சுயநலங்கள்
மரணித்துப் பயனென்ன?
இதை அனுமானிக்கத்
தெரியாத மானிடனோ

சுயநலத்தின் உச்சமதில்
இன்னும் அகங்காரமாகவே
வீற்றிருக்கிறான்!!

.

நேற்று நீ விதைத்த
விதைகள் தளிர்க்கிறது
என் எண்ணற்ற கண்ணீர்
துளிகளில்..

நீவிதைத்ததாதலால் அதுவும்
தண்ணீருக்கு பதில் கண்ணீருக்கே
அதிகமாக துளிர்க்கிறது..

.

தாயின் சுவாசத்தை
சுவாசித்ததிலிருந்தே,
காலத்தால் சுழற்றப்படும்
சக்கரமே நாம்...
ஏதேதோ தேவைகள்,
கற்பனைகளோ எண்ணற்றது.
ஆசைகளின் அதிகார ஆட்சி,
ம்..... ம்.....

அதன்+பால் ஈர்ப்பதற்கு
உலகிற்கு நிகரிந்த உலகே.
வாழ்வெல்லாம் வசந்தமாக,
வசந்தமற்ற விதியென்ற
ஒன்றையும் அறிமுகப்படுத்தி
கைகட்டி உலகிற்குப்துணையாக
நிற்கிறது இந்த காலம்.

விதியை மதியால் வெல்ல
முடியுமாம் கூற்றிதோ மனிதனின்.
மதியை கூட விதி தான்
வழி நடத்துகிறது
விதியை நம்புபவனிடமென்பது
அவனே அறியாத ஒன்றா?

அன்பையும் நம்பிக்கையை
அதையும் மரணிக்கச்செய்து
அவன் வாழ்கிறான் இந்த
நிலையற்ற வாழ்வதனை...

.

உன் பாதி,நானுன் பதியென்றான்.
பதியாவதற்கு முன்னமே பாதை
மாறி,பதி பாதியாக உருப்பெற்று
பற்றில்லாமல் எப்படி வாழ்வை
கற்றுத்தந்ததோ,

அதை விட யாரையும் நம்பாதே
என்ற வாசகத்தையும் வெகுவாக
கற்றுத் தந்துள்ளது..

.

போதும் விட்டு விடு!
உன்கண்ணாமூச்சி ஆட்டத்தில்
குருடானவள் நானே!
தெரிய திசையுமின்றி,
போக பாதையுமின்றி
தத்தளித்து நிற்கின்றேன்
போதும்மெனை விட்டுவிடு.

.

மறந்து விடு!
எவ்வளவு எளிதான
வார்த்தை உனக்கு..

சிறிய கலக்கமேனும்
உன்னுல் இருப்பதாய்
நானறியேன்..

காலத்தின் கட்டாயந்தான்
என்னிடத்தில் உன்னை
சேர்த்ததா

நீசொல்வதைப் போல்..
என்ன கட்டாயம் வந்தது
அப்படி அந்தக்காலத்திற்கு?

உன்னை நீ நியாயப்படுத்த
ஏன் அநியாய குற்றமாக
காலத்தை பழிசொல்கிறாய்?
உன்னிடம் வழியில்லாததாலா?

அந்நியரின் ஆட்சிக்காலம்
முடிந்தாயிற்று ஆயினும்
உன்போன்று மனமற்ற
அநியாயக்காரர்களிடமல்லவா
இன்று எங்களைப் போன்றோரின்
மன ஆட்சி விடுதலையற்று
தவிக்கிறது.

.

மறக்க நினைத்தாலும்
நீ பொய்யாக விதைத்த
ஒவ்வொரு வார்த்தையும்
மெய்யாகவே என் காதுகளில்
ஒலிக்கிறது...

மறக்க கூடிய அளவு
வேதனையா நீயெனக்களித்தது?
இரத்தத்தையே உறைய
வைக்கும் வேதனையல்லவா
நீ தந்தது...

வேதனையை வேடிக்கையாக்கி
பார்க்கிறாய்-அந்த வேடிக்கையே
உன்வேதனையாகமல் பார்த்துக்கொள்
என் கடந்த கால அன்பரே!

.

வெளிச்சத்தை காட்டினாய் என்று
திசையறியாது விளக்கின் மேல்
பறந்தேன் நான் விட்டில் பூச்சி
என்பததனையும் மறந்து..

.

வார்த்தையவன் வாழ்க்கையென்றான்,
வாழ்க்கையே வார்த்தையில்
முற்றுப்பெற எண்ணித்தானோ?
வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளி
வார்த்தைதான் என்றால் எதற்காக
இந்த வெளி வேஷம்?

.

கணம் கணமாக நெஞ்சில்
கன்னமிட்டுப்பார்த்து ரசிக்கும்
உனை என்னநான் சொல்வது?
காயமின்றி கன்னமிட்டது இதயத்தை
கொள்ளையடிக்க என்றாய்.

இன்றோ அதனூடே வலிக்கவலிக்க
ரத்தம் சொட்டுகிறதே இரத்தமா!
பார்த்ததும் மூர்ச்சையாகுவேன்
என்கிறாய்,கன்னமிட்டதே நீ தானே..

.

அன்புக்கு பரிசு
நீ தந்ததாக இருப்பின்,
உன்காதலை விட
பொய்யானது இவ்வுலகத்தில்
எதுவுமே இல்லை..

.

வேதனையின் எல்லைக்கே
என்னை ஒப்படைத்து விட்டு,
வேதனையா!என்று எப்படி
ஆச்சரியக் குறியீட்டோடு
வினா குறியீட்டையும்
சேர்த்துக் கொள்கிறாய்?

இப்போது புரிகிறது
உன்னாலெதுவும் முடியும்
உண்மையை நேசிப்பதை
தவிர..

.

கண்டதும் காதலா?
கறையற்ற காதல்
என்றாய்,

கறையற்ற காதால் தான்
இன்று கரை காணாமல்
போனதோ?

.

கண்ணீர் வற்றிப் போனாலும்
ஏனோ உன் ஞாபங்கள்
நெஞ்சமெங்கும் நிரம்பி
வலிக்கிறது..

கண்ணீருக்கு பதில்
உன்ஞாபங்கள் வற்றி
விலகித்தூர போகாதா?

.

நீ எனக்கிலை என்று
தெளிவாக தெரிந்த
பின்பும், உன்
அன்பே என்னை
ஆட்கொள்கிறது!

.

வன்முறைகளை கடந்தது
காதல்..
அன்புரைகளைக் கடந்ததும்
காதலா?

காதலுக்கு உண்மையான
விளக்கம் தான்னென்ன
உன் அகராதியில்?

.

ஆனந்தம் என்ற சொல்லே
அபத்தம்மென்றாகி போனது
உன்னாலே..

.

வார்த்தையற்று துடிக்கும்
என்னிடம் என்ன பதிலை
எதிர்ப்பார்க்குறாய் நீ?

இப்போதெல்லாம் வார்த்தைக்கு
பதில்-என் கண்ணீர் தான்
எனக்கே விடை தருகிறது..

.

காதல் சொன்னதும் நீ
காயப்படுத்தியதும் நீ தான்.
காயமாற்றும் மூலிகையதோ
உன் வசம் இருந்தும் ஏன்
காயமாற்ற நினைக்கவில்லை?

வலியை நானே அன்பெனும்
விலை கொடுத்து வாங்கினேன்..
என் அன்பு எப்படி விலை
மதிப்பற்றதோ நீதந்த வலியதுவும்
அளவற்றே தினம் வதைக்கிறது.

வலியதையும் திளைக்க வைத்தவன்
நீ, நெருடல் துளியும் இல்லாமல்
இன்னும் உன் நாடகம்
என் வீட்டில் அரங்கேறுகிறது.

அம்மாவை பார்ப்பதாக
வருகிறாய்,
என்னை பார்த்து நலமா
என்கிறாய்,
என் நலமோ உன்னிடம்
சிறைப்பட்டு எண்ணற்ற
நாட்கள் ஆகின்றதே!

.

என் கண்ணீர் துளிகள்
ஒவ்வொன்றும் உன் மீது
நான் கொண்ட அன்பிற்கு
சாட்சிகள்.....

அந்த சாட்சியை உன்
கண்களுக்கு காட்சியாக்க
நினைப்பதுதானய்யா
கொடுமை!

இப்போது தான் புரிகிறது
நீகாதலித்தது என் காதலின்
ஆழத்தையல்ல என் கண்ணீரின்
ஆழத்தையென்று...

என் இதயத்தில் ஒலிக்கும்
ஒவ்வொரு சப்தமும்
உன்னையே உச்சரிக்கிறது.
என் காதுகளில் கேட்கும்
ஒவ்வொரு சத்தமும் உன்
குரலாகவே கேட்கிறது..

வாய்மொழி அது கூட
உன் பெயரயே வேண்டியே
நிற்கிறது பார்க்கும் இடமெல்லாம்
நீயிருக்க மாட்டாயா என்றோர்
ஏக்கம்!

பார்த்தால் எங்கே ஆயுல்
முழுதும் அந்த வேதனை
தொடருமோ என்றோர் பயமும்
கூடவே எச்சரிக்கிறது.
உனக்கே தெரியாமல் உன்
புகைப்படம் என்னிடம்..

எனக்கே இல்லாத நிஜம்
இன்று நிழல் படமாக
என்னை ஆதரிக்கிறது..
உன் ஞாபங்கள் மறந்த
மணித்துளிகள் என்
நேரங்களிலேயே இல்லை.
இனியும் இருக்க போவதில்லை..

.

கண்களுக்கு உன்னை
பார்க்கும் ஆவலை விட,
உன்னை பார்க்கக் கூடாது
என்ற தவிப்பே அதிகமாய்
இருக்கிறது..

வலியின் உச்சத்தில்
வீற்றிருக்கும் என்னிடம்
இனியும் சிந்த கண்ணீர்
இல்லை...

.

காத்திருப்பை பாவம்
என்று சொன்ன நீயேன்
காதலை பாவம் என்று
சொல்லவில்லை?
அன்று நீ சொல்லாததால்
இன்றைய பாவப்பட்ட ஜீவன்
நானாகிப் போனேன்..

.

உன் வாழ்வு உனக்கே
என வாழ்த்தி விட்டுச்
சென்றாலும்,

எதோ ஒரு நெருடல்
இன்னும் என்னை
துரத்திக் கொண்டே
இருக்கிறது..

.

உன் நினைவுகளோடு
போராடியே,
என் உணர்வுகள்
சிதறிப் போயின..

சுகமே காத்திருப்பில்
என்றாய் இன்று
வரையில் சுகம்
என்ற சொல்லைத்
தவிற வேறேதும்
அறிந்தேனில்லை..

என்காதல் ரணமாகி
நெருப்பினில் வேகும்
உணர்வை பெற்றது
தான் மீதம்..

.

நீ வரமாட்டாய்
என்று தெரிந்தும்
என் நினைவுகள்
ஏனோ இன்னுமுன்
வருகைக்காகவே
நீவரும் வழிபார்த்து
உன்காலடி
சத்தத்திற்காகவே
ஏங்கித் தவிக்கிறது..

.

மௌனத்தின் வலியை
புரிந்து கொள்ள
மனதுக்கும் துணிவில்லை,
மனதின் வலியை
தெரிந்து கொள்ள உன்னாலும்
முடியவில்லை..

.

காலத்தால் என்றுமே அழிக்க
முடியாத நினைவுகளை
தந்துவிட்டு,

அழிக்கச்சொல்லுவது
நினைவுகளை அல்ல
உயிரதையே..

.

Top Menu

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Top Tabs

About Me

My Photo
கொழும்பு, Sri Lanka
நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..

கடிகாரம்

இனிதே ரசிக்க..

சில உண்மைகள்..

முகநூல்

தொகுப்பு..

நிழலின் பரிணாமங்கள்.

Followers

நீ அம்மா..

பொய்யானஉலகில்
பொய்யற்ற ஓர் ஜீவன் நீயேஅம்மா.ஆயிரம்சொந்தம் வந்தாலும் இறுதிவரையில் நிலைப்பதுன்னுறவுமட்டுமே எமைமட்டுமல்லயெம் பாரங்களையும்
கடைசிவரையில் சுமப்பதும்நீயே..
அதனால் தான் நீஅம்மா

அந்தி நேரத்தென்றல்.

சேரும் சொந்தங்களோ இறுதிவரை நிலைப்பதில்லை,நல்ல நண்பனின் நட்போ சாகும் வரையில் எம்மை விட்டு பிரிவதில்லை.

உன் பேயரை சொல்லும்..

காலம் முழுதும் சேர்ந்திருக்க ஆசைதானாயினும். ஏதோவொரு வழியற்ற வழியொன்றதால் வலிக்குதென்இதயம்.

அழகாய்ப் பூக்குதே..

உண்மையான காதலின் ஆழம் இதுவரை யாராலும் விளங்கவோ,விளக்கவோ படாதது.கண்களால் வந்த காதல் கண்களுக்குமட்டுமே விருந்தாகாமல் மற்றக் கண்களுக்கும் விருந்தாக்கப் படாமல் இதயத்தோடு கலந்து இனிதே வாழட்டும்.

கரையும் நினைவுகளில்

கரையும்நினைவுகளில் நிஜமானவளென்றுமே நீமட்டும்தான் உன்நினைவில் கழியும்பொழுதுகள் தவக்கோலங்களே..

வலி வலி..

சோகத்தின் முகவரி எதுவெனக்கேட்டால் அது உனதெனதுபெயரே.இலக்கம் இல்லாமலேயே எம்மை வந்து சேரும் அஞ்சல்..

உலகம் ஒரு..

காதலின் வேட்கைதான் கண்ணீரின்சாதனைமனதில் நாம்விதைத்தகனவுகள்கானல் நீரில் நாம்தீட்டியகடிதங்கள் ஜென்மங்கள்முழுதும்மழுது தீர்த்தாலும்உறவற்றுப்போன உன்னன்புக்கு ஈடேது?

நன்றி சொல்லவே..

நன்றியென்னறசொல்லில் உன்னன்பை சிறைசெய்ய இயலாது, இருந்தும் நன்றியென்ற சொல்லுக்கு மறுவடிவமோ இன்னும் கண்டறியப்படவில்லை அதனால் தானிந்தநன்றி.

நிலவோடும் மலரோடும்..

நிழலின் பரிணாமங்கள் என்றும் இருளதற்கே பரிந்துரைக்கப் படுகிறது.. அதேபோல் ஏனென்ன்ற கேள்வியும் என்றுமே தனிமையதையே நேசித்து எம்மையும்மதற்குத் துணையாக்குகிறது, தன்தனிமையைப் போக்குவதற்காக..

கங்கை நதியே..

எம்மை நேசிக்கும் பந்தங்களே, சொந்தமாக சந்தேகத்தை ஆதரிக்கும் போது, விடியும் திசையோ விதியை சார்ந்தது...

நன்றி சொல்லவே..

துயரே வரமெனப்பெற்ற எனக்கு,சுகவரி சொன்ன தேவனே, வாழும்வரையுன் நிழலெனத் தொடர்ந்திருப்பேனெனன்பே.

காதல் இல்லை..

உன் வாழ்கையை எழுதியவன் யாரோ அதைவாழும் நாட்கள் மட்டுமேயுன்னோடானது. உறவின் உச்சக்கட்டம் சாதலையேசார்ந்தது,அதையும் கொஞ்சம் புரிந்து கொள்மனிதா!

ஒருமுறை தான்.

கண்களால் மௌனித்து
மௌனமகஉறவாடியயெம்
உள்ளுணர்களெம்முள்ளே மௌணமாக மரணிக்கிறதின்று உண்மையதின் நிசப்தத்தின் மெய்யிதுவோ சிதரலுணர்வுகளின் மரணமதிலுணர்கிறோம் பெற்றவரின்பாசமதை. சிலதரக்காலத்தின் விடுகதையதற்கு விடையாவதெம் காதலே அன்றிவேறில்லை தவிக்கிறது தினதினம்மனது உறவுகளினதுசஞ்சீவிகேட்டு...

கங்கைக்கரை மன்னனடி..

என்னுள்ளம் மட்டுமல்ல உயிரும் உன்கையில்தான். நெஞ்சிலெழும்அன்பலையில் மூழ்கிப்போனவள் நானே ஜென்மஜென்மங்கலானாலும் எனைப்பந்தாடுவதுன் நினைவு மட்டுமே...

எழுதாத விதியிதுவோ

குற்றம் புரியாமலயே வேதனைகளுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பது தான்னிந்தக் காதலின்எழுதாதவிதியோ!

நீதான்வேண்டும்.

நினைவுகளும்சுமையென
மாறவே தள்ளடுகிறது என்னுயிருமமுன்னன்பின்றி..

என்னமறந்த பொழுதும்..

உறக்கத்திலுமுன் நினைவுகளை மறக்காது உன்பக்கம் திருப்பும் விந்தை என்னவோ உன்னோடான என்நினைவுகளுக்கே இருக்கிறது.

உயிரேஉயிரின்.

உறவுகள்தொடர்கதையில் கானாமல்போவதென்னவோ நாம்தான் உயிர்பிரிந்தாலும்
எம்மையாட்கொண்டஉறவின்
ஞாபகங்கள் எம்மைவிட்டுப்
போவதில்லை....

தென்றல் காற்றே...

உன்பிரிவின் ஒவ்வொரு நொடியிலுமென்னாயுளின் மறைநிசப்தமதுவே ஒழிந்திருக்கிறது. மௌனங்களேயென் வாழ்வானாலும் அதையும் மொழிபெயர்க்கவுன் உள்ளமதுவே வேண்டும் தருவாயா என்னாயுள் உள்ளவரை.

நான்னுறங்க வழியில்லையே

உன்பிரிவால் நாதியற்று
தவிப்பது நான்மட்டுமல்ல
நம்வாழ்வில் நாம் கண்ட
சந்தோஷநிமிடங்களுந்தான்.

உணராதோ என்னுயிர்துடிப்பு

வாழ்நாற்களுக்கேசொந்தமற்ற நாம்சொந்தங்களைநாடி விதியைச் சாடுவதேனோ?

ஒருமூன்றாம்.

சாபத்தையே வரமாக
மாற்றியவனே நாளும்
துதித்து போற்றினாலும்
என்றென்றுமென்கடவுள்நீதான்.

கூடு எங்கே..?

உள்ள மனக்கிடுக்கை மட்டுமே உறவாகிவிட்ட எமக்குபோகும் வழியோ தெரியவில்லை ஆனால் பயணம் மட்டும்தொடர்ந்து கொண்டேதான்னிருக்கிறது....

எங்கிருந்து..

Powered by Blogger.

Pages