
வரங்களற்ற வரவுகள் நாம்
வர்ணங்கள் துளைத்த
பூக்களதுவும்,
விருதத்தோடு நிறந்தேடி
சென்றிடினும்,
வெறுமையாக வெறிக்கிறதின்று
நிறங்களும் நிறங்களற்று.
தருவதற்கு அதனிடம்
ஏதுமின்றி..
தவறியுந்தவறாக எண்ணுவதேனோ
தவறும் உலகமிதிலொன்றும்
புதுமையில்லையே
தவறுகளும் தவறுதளுமின்றி
உலகமேயில்லை என்றாயிற்று
இன்று..
இதுவெறும் நாணல் விளைநேசம்
பூவதோ புல்தோறும் கோடிப்
பெறுமதியன்றோ,
இதை பூரித்துபூரித்து புதைகுழி
கண்டோர் கோடியுளர் ..
போலியுற்ற புலவியுணர்வுகளில்
புரலும் உள்ளுணர்வுகளதை எப்படி
உணர்வென்று பூரிப்படைவாய்
தினதினம்?
ஒருதுளிநீரற்ற பாலைவனந்தனில்
பயணிக்கும், எத்திசைதனிலும்
வெறுமையே வெறிச்சோடிக்கிடக்கும்,
தனிமையான உள்ளத்து அகதி,
நீ நான் யாராயினும் உள்ளந்தனில்
உண்மையில்லாதவன் எவனோ
அவனின் நிலைதான் இதுதான்...
.
0 கருத்துரைகள்:
Post a Comment