
சிகரமற்ற சிகரம்தொட நினைப்பவன்
சீரழித்தே செல்கிறான் சிதைத்துசிதைத்து,
அன்பெனும் அகிலமதை அழித்தேதான்
ஆளுகிறான் சுயநலப் போர்வையதில்!
வினைக்களம் தன்னில் வினாபூதகற்பனை
விடுப்பவனிடம் வினாசம் தவிர்த்தெதை
எதிர்ப்பார்ப்பது இங்கு??
ஏமாற்றம் ஒன்றே வாழ்வென்றாகிப்
போனது.
வழக்கமற்ற ஒன்றின்று வழக்காகவே
மாறிப்போகிறது,
வழக்கறிஞனும் அவன் தான் நீதிபதியும்
அவனுக்கு அவனேதான்..
இதுதான் மானிடன் இல்லம் என்றாயிற்று,
உள்ளமது இல்லாதவனினதும் ,
கள்ளமது உள்ளவனினதும்
கல்மனது கொண்டவனினதும்!
.
3 கருத்துரைகள்:
அன்பெனும் அகிலமதை அழித்தேதான்
ஆளுகிறான் சுயநலப் போர்வையதில்!
..... sad, but true!
வினைக்களம் தன்னில் வினாபூதகற்பனை
விடுப்பவனிடம் வினாசம் தவிர்த்தெதை
எதிர்ப்பார்ப்பது இங்கு??
ஏமாற்றம் ஒன்றே வாழ்வென்றாகிப்
போனது.
very nice
மிக நன்றாக உள்ளது உங்கள் கவிதைநயம்.
Post a Comment