
மனமோ மாயக்கூண்டில் சிறைப்பட
மாயமாக கண்கட்டிச் செல்கின்றது
உள்ளந்ததனில் புதிரான புதிரொன்று
உயிர்பிழியும் உணர்வுக் காட்டில் நின்று
உள்ளம் உருகித்தான் சொல்கிறது
உயிர் சுவாசந்தனில் உள்ளூரக் கலந்த
உறவு பட்டியலில் நீயும் உறுதியாக
உயிர் வாழ்கின்றாய் என்று....
அந்தந்தனில் பயணிக்கும் உணர்வதின்
ஆதிக்கம் அலைபாய ஆதிதனை
ஆதரிப்பவள் அல்லவே இவள்.
இதயமதில் இமையமாக கனக்கிறது
இன்றியமையாத உறவொன்று இன்று
இயலாமல் தவிக்கையில்..
தலைகோத முடியா காலத்தூரமதில்
தலைசாய்க்க நினைத்து, தத்தளித்து
திணறும் போழுததை பரிசளிக்க
தாகித்த இவளால் இயலவில்லை,
தினந்தோறும் தித்திக்கும் வாழ்வுனக்கு
திவ்யாமாய் அமைய வேண்டியே
இந்த மௌனப் பொழுதுகளில்
நிசப்த போராட்டங்கள்..
.
3 கருத்துரைகள்:
கவிதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்வுகளின் வலி மெல்ல முகம் காட்டி செல்கிறது .
உண்மை தான்.. நன்றி சங்கர்..
ப்ரெசென்ட் நைனா
Post a Comment