
விடியல்கள் தோறும் தொலைந்து
போகிறது
விறையமாக விரைந்தேதான் இவள்
கனவுகள்
ஏக்கங்கள் பொழியும் ஏகாந்த
பொழுதுகள் யாவும்
உன்நினவுகளின் தேக்கத்தோடு தினம்
ஏமாறுகின்றது எண்ணங்கள் எல்லாம்
சொல்ல மொழியறியா குழந்தை
போல..
மனம் அதுவும் தவிக்குது நாளும்
மஞ்சமது உன் நெஞ்சமாகாதா என்று
நிஜமதுவோ மறைவாக நின்று
நிதர்சனம் வழிமொழிகிறது
``அதுவுன் மறைகணக்கதில் வரவு
இன்றதை மறந்திடு என்று”..
நிஜத்தின் காயந்தனை ஏற்க
நிழல் கூட விரும்புவதில்லை..
வடுக்கள்தனில் வாடுவது என்றுமே
நிஜத்தில் பாசங்களேஅன்றி
வேறில்லை.-
மறைகணக்கதில் மறைந்ததுவும்
இவள் உயிரேயன்றி உன்காதலில்லை
எனதன்பே...
.
0 கருத்துரைகள்:
Post a Comment