
கொடூரத்தின் கோடதனை பார்த்து
நெருடலின் கீறலதையும் சேர்த்து
மாயமென்றானதோ மனிதமனங்களின்
கோடி, மாவிழி கோலங்களதுவும்..
கலைகலை என்றேதினம் சொல்லியேனிந்த
உள்ளக் கலைதனை இழக்கச்செய்கிறாய்?
உற்சாகமாகவே உளைச்சலின் ஆக்கிரமிப்பு
அதுவும் உச்சரிக்கிறது எம்பெயர்தனை
அதில் தன்னலமற்று உழைக்கிறது உள்ளக்
களைப்பதுவும் தன்பங்கிற்கு!!
தொட்டுநழுகிறது இதமாகவே எம்மைத்
தடம்பார்த்தே,வடுக்களையும் தழுவிச்
செல்கிறதிந்த அலைக்காற்று.
அக்னிவட்டத்தை முழுமையாக விழுங்கிய
பின்பும் கூட.
விந்தையின் விளிம்பு இதுவன்றேல்,
மாயத்தின் மாயையும் அதுவொன்றோ!!
உள்ளதில் ஊன்றிக்கிழித்த வடுக்களதுவும்
மாயத்தின் வசமாகாதோ என்றும்
அழைப்பதில் அழைக்காதே எனச்சொல்லும்
தழும்புகள் தானும்தன் பெயர்
மறக்கதோ இன்றோடு !!!
.