
வலியதை மிஞ்சி வாழ்வில்லை..
வாழ்வற்ற ஏதோ ஒன்று
வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது..
மனிதன் வாழும் வரையில் ஏன்
மனிதம் வாழும் வரையிலும்
கூடத்தான்..
எட்டி பறிக்க நினைக்கிறது
பட்ட மரத்துக் கனியதையும்
வெட்டாமலே வெகு சுலபமாக
நட்டமாவது என்னவோ நமக்கு
நாமேதான்,
பட்டமென்னவோ பாசம்பாசம்
பாசமாம்..
எம்மை வீழ்த்தும் அதுமட்டும்
என்றும் வீழ்வதே இல்லை.
வீழும் எம்மையும் வீரத்துடனையே
தோள் தட்டி எழுப்புகிறது..
அனுபவமதின் பெயர் கொண்டு...
.
0 கருத்துரைகள்:
Post a Comment