
உயிருக்கும் ஏதோ ஆரூடம்
கேட்கின்றது..
உளிபோட்டு உளைய வைக்கும்
நெஞ்சமதற்கும் சேர்த்து..
கண்ணீர் சுமக்கமட்டுமா இந்தக்கண்கள்
வெந்நீர் பறக்க தீக்குளிக்கிறதே நினைவுச்
சுமையதனால்..
ஒலிகேட்க ஒளியற்றது குருடனின்
ஜாதகம்..
ஒளிதெரிய ஒலியற்றதே செவிடனின்
ஜாதகம்
இரண்டும் இருந்தும் செயலற்றதே
இவளின் ஆரூடம்..
வலிசொல்லி வழிகேட்க விரும்பவில்லை
வழிகேட்டு வலிமறைக்க ஊனமில்லை
இருந்தாலும் இயல்பான நிலைசெல்ல
முடியவில்லை..
நிஜங்களதுவும் நிழல்கள் பட்டியலதில்
இரண்டாம் நிலையா?
பரிணாமங்களுக்கு எங்கே பரிதவிப்பு!
பரிவற்றவனுக்கும் அது இல்லையே..
கணவளவேனும் கைகொடுக்கவில்லை
கனவுகளின் நிஜங்கள்தானும்,
விலையற்றது எனினும் விலை
பொதிக்கிறது.
இப்போதெல்லாம் தனக்குத்தானே
நிஜங்களதுவும்..
மனமாளும் கனவாளனும் கனவாகும்
தருணம்,
கரைதட்டி தரைதேடும் மீன்தானவள்..
.
1 கருத்துரைகள்:
vithiyasamana pirayogam vazhthukkal
Post a Comment