
போர்வையின் இடையிடையே ஈரத்தின்
சாரல் துளிகள்..
ஒன்றோடு ஒன்றாக இறுகிய விரல்களின்
சராம்சம் அறிந்தவள் அவள் அவள்
ஒருத்தி மட்டும் தான்..
யாரோ ஓவரின் வருகையை அவள்
செவிகள் உணர்த்த ..
போர்வை கண்ணீரின் துடைபாக
மாறயே உள்ளிருக்கும் உண்மை
தனை மறைக்க சாமர்த்திய
சான்றாக அவள் கைகளிள்
தஞ்மானது தலைவலி வலிமறப்பு
திரவியச்சாடி..
கண்களில் பட்டதால் தானந்த
கண்ணீரின் வருகையாம் சமர்த்திய
ஒப்புதலை இவள் சொல்லியும்,
தாயின் வருடல் அதில் அவளை
மீறிய கண்ணீர் துளியொன்று
அவள் தாவனியில் வீழ்ந்தது
அவள் மிறட்சி புரியாமல்.
உணர்ந்தும் உணராமல் உரைக்க
மறுத்த காரணமதை எண்ணிமகளின்
வாய்மொழியதை தனைக்குள் தானே
வழிமொழிந்த படி தன்னிச்சையக
நடந்தது தாயின் பாதங்கள்..
நற்பில் தோள்போடும் மகளின்
மாறுதலின் புதுமையோடு
யோசனை எதுவென யாசிக்க
தொடங்கியது தாயின்
இதயம்..
அதையறியா பேதையின் அன்னை
காலடிச்சத்த ஓய்வினில் உயிர்பெற்றது
மீண்டும் பெருமூச்சொன்று பாரிய
தேம்பலுடனே,
அவள் மட்டுமே சுமக்கும் அந்த இரகசிய
ஏக்கத்தை தானும் அறிந்த வீராப்புடன்..
.
1 கருத்துரைகள்:
போர்வை கண்ணீரின் துடைபாக
மாறயே உள்ளிருக்கும் உண்மை
தனை மறைக்க சாமர்த்திய
சான்றாக அவள் கைகளிள்
தஞ்மானது தலைவலி வலிமறப்பு
திரவியச்சாடி..
கண்களில் பட்டதால் தானந்த
கண்ணீரின் வருகையாம் சமர்த்திய
ஒப்புதலை இவள் சொல்லியும்,
தாயின் வருடல் அதில் அவளை
மீறிய கண்ணீர் துளியொன்று
அவள் தாவனியில் வீழ்ந்தது
அவள் மிறட்சி புரியாமல்.
......அருமையான காட்சி விவரிப்பு.
Post a Comment