
ஆழம் மூழ்கிச்செல்லும் அரைநொடிப்
பொழுததிலும்
ஆயூல்ய மூச்சவிலாமலே கனக்கிறது
நினைதெரிந்த நாள்முதல்....
காரணமதுவும் ஏதேதோ முடிவுகளை
எடுக்கின்றது தன்னால் இயன்றவரை
முற்றும் என்றோர் சொல் இல்லாமல்.
என்னை கடக்கும் நொடிகளில் பெறுகின்ற
ரணத்தின் கனங்கள் ஒவ்வொன்றும்
உன்பெயர்தனை உச்சரித்து உச்சரித்தே
ஞானம் பெறுகின்றது..
ஏகாந்த பொழுதுகள் எல்லாம் என்னுள்
ஏகோபித்த முடிவுகளை எடுகின்றது
என்னை கேளாமலே..
எவனோ நிச்சயித்து நிர்பந்தித்த
பாதையின் இடையே எமக்கே
தெரியாமல் இளைத்து இளைப்பாறும்
உன் என் விம்பங்களில் சடிதியாக
எழுகின்ற ஞாபக விஷ்பரூபந்தனில்
விசும்பி விசும்பி ஊற்றெடுக்கிறது
நினைவுதேக்கத்தின் நீரூற்று
கண்களின் வழியே..
அதிலும் நிதானமாக துளிர்க்கிறது
என்றோ தூவிய பாசவிளை நிலம்.
நிரூபனம் ஏதுமற்ற நிலைதனில்
நிபந்தனை இல்லாமல் இளைப்பாரும்
இருப்பிடம் தேடிபுறப்பட நினைக்கிறது
நன்னாலதில்இங்கிதமாக இவளின்
நில்லாத இயல்பற்ற எண்ணங்கள்..
.
4 கருத்துரைகள்:
எமக்கே தெரியாமல் இளைத்து இளைப்பாறும்
உன் என் விம்பங்களில் சடிதியாக எழுகின்ற
ஞாபகங்களின் விஷ்பரூந்தனில் விசும்பி
விசும்பி ஊற்றெடுகிறது நினைவுதேக்கத்தின்
நீரூற்று கண்களின் வழியே..
.....அருமையான வெளிப்பாடு!
காதலின் சோகத்தை வெளிப்படுத்தும் படிப்போரை சூழ்கிறது. நல்ல கவிதை.
Chitra said...// நன்றி..
ரகுநாதன் said..// நன்றி..
Post a Comment