
யார்நீயென நா ஆழும் கணக்கினில்
யாதுமற்று பூஜியமாகிறது அனைத்துமே
யதார்த்தம் எனவே அன்பதும் இங்கு
நிதம் நிந்தித்தே அனாதையாக்கபடுகிறது
நியாயம் ஏதுமின்றியே.
வினாவில்லாக எம்மை துளைக்கயில்
வீழ்ந்தே துடிகின்றது பாழும்மனமிது
உயிர் இருந்தும் பிணமகிறது இங்கே
அதுவும் கூட ஆதரிக்க ஆளின்றி
அனாதைபிணம் என்ற போர்வைதனில்.
அதிலும்கூட மனிதனை ஆசுவாசப்படுத்துவதாய்
அனுமதியின்றியே ஆழம் சென்று
திரும்புகிறது பிராணவாயு அது மேலும்
உட்செல்ல வழிகளின்றியே!
சுயவிருப்பமதில் அதுவும் கடமையென
கடக்கின்றது பொருத்தமற்ற மெய்யதில்
மென்மையாக.
முடிவிலி எதுவுமே இல்லை மனிதன்
முற்றுப்பெறும் வரையினில் இதுதான்
எழுதாத விதி என்று ஆயாச்சு..
மனிதம் உயிர் பெறும்போது இங்கு
மனிதன் என்று எவரும் இப்பாரோ
என்னவோ..
.
0 கருத்துரைகள்:
Post a Comment