
இடைவெளியின் ஸ்பரிஷம்
ஸ்தம்பித்தலின் இயல்நிலை
தானே,
இயற்றுவித்தவன் யாராகிலும்
சுழற்சியின் சுழலில் சுழல்வது
சூளுரைக்கப்பட்ட பிறத்தலின்
முன்பின் இடைக்கால
வரவென்றாயிற்று ஒவ்வொருவர்
வாழ்விலும்..
அதை வரமெனக் கருதுபவன்
கருதலின் வழி அனுபவம்
பெற்றவனாகிறான்..
அதை விதியெனச் சொல்பவன்
சொல் வழியதில்
சிலவேலைகளில் விதியதை
தன் கருவிதை எனச்சொல்லியே
செயலற்றவனாகிறான்..
அதை மதியெனக் கொண்டவன்
பகுத்தறிதலின் வழிபயன்பெறுகிறான்..
எவ்வழி எவர்வழியாயினும்
வாழ்வழி அதனிலும்
வலியதை மதிவழியாக்கியவன்
இடைவெளியின் ஸ்தம்பித்தலதிலும்
வெற்றியின் ஸ்பரிஷமதை உணர்ந்து
அதற்கே உரித்தாகுகிறான்..
ஆக இடைவெளி இயல்நிலை
உணர்ந்தவரே அனைவரும்
அவ்வாறே என் வாழ்வின்
இயல்நிலையும் இடைவெளியின்
நீண்டதொரு தொடராயிற்று
அத்தொடரின் முற்றுப்புள்ளியின்
அருகில் கவிதைக்கான
தொடர்புள்ளியை இட்டிருக்கிறேன்
மீண்டும் இன்று...
0 கருத்துரைகள்:
Post a Comment