
ஊர்ந்துகொண்டே நகர ஆரம்பிக்கிறது
வலிகளின் வரிகள்..
முற்றுப் பெறும் எதிர்பார்ப்பின்
பிடியில் நெருங்க மறுக்கும்
முற்றுப்புள்ளியில்தானும் ..
நகரமறுக்கும் வலியின் நரகமதில்
விழிக்கிறது விழிகள் அர்த்தமேதுமின்றி..
அச்சமயத்தில் அனைத்தையும் இழந்த
உணர்வின் வெளிப்பாடுதனிலே..
கண்ணீரின் நகரத்தில் துளைக்கும்
அனைத்தையும் தேடிப்பார்த்தால்,
திகைக்கின்றோம் எங்கே நாமென்று
எம்மை காணாமல்...
.